Ennadhu naa Bigg Boss house porenaa?

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் பிரியா. இவர் தற்போது ஹீரோயினாக 'மேயாத மான்' என்ற படத்தில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில் பிரியா விரைவில் பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக செல்லவுள்ளார் என்ற தகவல் பரவியது.
இதுபற்றி முகநூலில் விளக்கமளித்துள்ள அவர் "நான் என் வீட்லயே 10 நாள் சும்மா இருக்க முடியாது, பிக் பாஸ் வீட்டிற்கு எப்படி போவேன்" என கேட்டுள்ளார்.

Comments