பிக்பாஸ் கமல் ஹாசனின் வாழ்வில் இன்றொரு முக்கிய நாள்

கமல் ஹாசன் என்பதை உலக நாயகன் என்று சொன்னால் சரியான பொறுத்தமாக இருக்கும். மற்றவரின் பார்வையில் இவர் ஒரு சிறந்த கலை நட்சத்திரம்.
பேச்சிலும் சினிமா, மூச்சிலும் சினிமா என இன்றளவும் அவர் அதை நேசிப்பதை காலம் அழகாய் காட்டும். களத்தூர் கண்ணாமாவில் தொடங்கி, விஸ்வரூபம் வரை அவரின் சினிமா பயணம் விரிந்துள்ளது.
மறக்க முடியாத ஒரு முகம், தன் ஆளுமை, விசாலமான பார்வையே இவரது பேச்சின் வெளிப்பாடு. செயலின் கூப்பாடு. சிறு பாலகனாக களத்தூர் கண்ணம்மாவில் தோன்றிய போதே சிறந்த நடிப்பிற்காக ஜனாதிபதியின் ராஷ்ட்ரபதி விருது தேடி வந்தது. இப்படத்தின் இயக்குனர் பீம்சிங் கூட இப்பெருமைக்கு சொந்தகாரர் தான்.
இயக்குனர் இமயம் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் கமலை கதாநாயகனாக அடையாளம் காட்டியது. பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை தான் இவருக்கு முதல் தேசிய விருதை தேடிவர வைத்தது.
பல இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் மணிரத்னத்தின் நாயகன், ஷங்கரின் இந்தியன் ஆகியன தனிச்சிறப்பை தேடி தந்தது.சிறந்த கதாசிரியாகவும் இருந்த இவர் விருமாண்டி, ஹே ராம் விஸ்வரூபம், தசாவதாரம் என சில படங்களை இயக்கி தயாரித்துள்ளார்.
எண்ணற்ற படங்கள், எத்தனையோ கதாபாத்திரங்கள், நடனம், இசை என இமைகள் திறந்து இன்னமும் சாதிக்க வேண்டும் என சுற்றித்திரிபவர்.அவரது சினிமா பயணத்தின் வயது 58. ஆம். சினிமாவில் இவர் ஒரு பிக்பாஸ் தானே. வாழ்த்துக்கள்.

Comments