ஆம், இன்னும் 45 நாட்களில் நாம் இறக்கப்போகிறோம்..

பொதுவாக எல்லாருக்கும் மரணம் குறித்த பயம் இருக்கும். யார் எப்போது எங்கே சாகப்போகிறோம்? இறப்பதற்குள் நம் கனவுகளை எல்லாம் அடைந்துவிடுவோமா என்ற பல்வேறு எண்ணங்கள் நமக்குள் தோன்றிக் கொண்டேயிருக்கும். இந்த நேரத்தில் உங்கள் இறப்பு தேதி உங்களுக்கு தெரிந்து விட்டால் ? என்ன செய்வீர்கள்? நீங்கள் மட்டுமல்ல எல்லாருமே.. ஏன் இந்த உலமே அழியப்போகிறது.
இறப்பது நிச்சயம் :
ஆம், இன்னும் 45 நாட்களில் நாம் இறக்கப்போகிறோம்.. இதனை டேவிட் மிடே என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்திருக்கிறார். அவரது கணக்குப்படி வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி உலகம் அழியும் என்கிறார்.
உலகம் அழியும் :
டேவிட்டின் கோட்பாட்டின் படி நிபிரு எனப்படுகின்ற ‘ப்ளானெட் எக்ஸ்' பூமியை நோக்கி வந்த அந்த கிரகம் பூமியை ஆகஸ்ட் 21 ஆம் தேதி மோதிடும். ஒரு மாதத்தில் அதாவது செப்டம்பர் 23,2017 அன்று உலகம் முழுவதும் அழிந்திடும்.
ஏன் ஆகஸ்ட் 21 :
அடிப்படையில் டேவிட், பைபிளில் சொல்வதை நம்புகிறார். அதனால் தான் சூரிய கிரகணம் தோன்றும் ஆகஸ்ட் 21 தான் அழிவின் துவக்கம் என்று நிர்ணயித்தார். முதலில் அக்டோபர் மாதம் தான் உலகம் அழியும் என்று சொன்னவர் பிறகு செப்டம்பரிலேயே உலகம் அழிந்திடும் என்றார்.
பைபிளில் :
பழைய ஏற்ப்பாட்டில் 13 ஆம் அத்தியாயத்தில் அதிகாரம் ஒன்பது மற்றும் பத்தாம் வரியில் இது சொல்லப்பட்டிருக்கிறது.ஒரு நாள் இயேசு வருவார், அன்றை நாளில் உலகம் முழுவதும் அழிந்திருக்கும். அவர் ஒளிவீசுவார், சொர்கத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் எதுவும் ஒளி வீசாது. உதிக்கும் சூரியனும் , நிலவும் ஒளிதராது என்றிருக்கிறது.
நிபிரூ என்றால் ? :
ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் இந்த பெயர் பிரபலம். பல ஆண்டுகளாகவே இதனைப் பற்றி விவாதித்து வருகிறார்கள். நிபிரூ வந்தால் அழிவு ஆரம்பம் என்று சொல்லப்பட்டு வந்தது ஆனால் இதுவரை எதுவும் அப்படி நடக்கவில்லை. முதன் முதலாக 1976 ஆம் ஆண்டு ஜிச்சாரியா ஸ்டிச்சின் என்பவர் 12வது கோள் என்று அடையாளம் காட்டினார்.
புரளி :
கடந்த 2012 ஆம் ஆண்டும் இதே போல ஓர் புரளியை பரப்பினார்கள். ஆனால் இன்றும் நாம் உயிருடன் இருக்கிறோம் எந்த பிரளயமும் ஏற்ப்பட்டு உலகம் அழிந்திட வில்லை.இது போன்ற அழிவு கோட்பாடுகளை அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் சொல்லும் வரை யாருமே நம்ப வேண்டாம். இதுவரையில் அப்படி யாரும் இந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தவில்லை. சமூகவலைதளங்களில் பரவி வரும் இதனையும் புரளிகள் பட்டியலில் சேர்த்துவிடுங்கள்.

Comments