முக்கியபுள்ளியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்! எஸ்.ஏ.சந்திரசேகர் ஓபன் டாக்

இளையதளபதி விஜய் இப்போது அட்லீ இயக்கும் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது படம் குறித்த தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஏற்கனவே அவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும், யார் இயக்க போகிறார்கள் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. சில தகவல்கள் வந்தாலும் இன்னும் உறுதியற்ற நிலையிலேயே உள்ளது.
இந்நிலையில் பொதுநல விசயங்களுக்காக போராடும் டிராபிக் ராமிசாமியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.
இதற்காக டிராபிக் ராமசாமியை நேரில் சந்தித்து பல விசயங்களை கேட்டு ஸ்க்ரிப்ட் தயாரித்துள்ளாராம். இதில் தன் மகன் விஜய்யை இளவயது ராமசாமியாக நடிக்க வைப்பதோடு, தானும் வயதான ராமசாமியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
இதோடு தன் சினிமா பயணத்திற்கு எண்ட் கார்ட் போட அவர் நினைத்துள்ளதால், இப்படத்தின் மூலம் முக்கிய பாடத்தை சமுதாயத்திற்கு கற்றுக்கொடுப்பேன் என கூறியுள்ளார் எஸ்.ஏ.சி.

Comments