நமீதாவின் திடீர் முடிவுக்கு கமல்ஹாசன் தான் காரணமா?

நடிகை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். ஆரம்பம் முதலே நமீதாவின் நடவடிக்கை பலருக்கும் ஒத்துபோனது. ஆனால் நமீதாவை பொறுத்தவரை ஓப்பனிங்கே கொஞ்சம் டென்சன் தான்.
நமீதா கிருஷ்ணரின் பக்தை. பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சியின் போதே பக்தியை பற்றி கமல் பேச நமீதாவின் முகம் அப்படியே மாறிப்போனது. அதே போல கடந்த வார இறுதியில் பரணியை கூப்பிட்டு கமல் விசாரித்த போதும் ஒரு விசயத்தை சொன்னார்.
ஆரம்பத்தில் நமீதா வெளிப்படையாக இருந்தார். ஆனால் இப்போதெல்லாம் மாறிவிட்டார். அவரை பற்றி புரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. இப்படியே போனால் பிக்பாஸ் வீட்டில் நமீதா தாக்கு பிடிக்க மாட்டார் என்பது போல கமல் கூறினார்.
இதனால் நமீதா பாஸே சொல்லிவிட்டார். இனி நம்மை தான் வெளியேற்றப்போகிறார்கள் என நினைத்தாரோ என்னவோ, மூட்டை முடிச்சுகளை பேக் செய்துவிட்டார். பொறுத்திருப்போம். யார் போகிறார்கள் என பார்ப்போம்.

Comments