அஜித்தின் ஒரு விஷயத்தை பார்த்து பொறாமைப்பட்ட விஜய்- சுவாரஸ்ய தகவல்

முன்னணி நடிகர்களான அஜித், விஜய் எப்போதுமே தங்களுக்குள் நல்ல நட்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் ஒரு பேட்டியில் Rj Sha பேசும்போது, ஒரு முறை விஜய் என்னிடம் தான் அஜித் அவர்களின் லுக்கை பார்த்து பொறாமைப்படுவதாகவும் அவர் மிகவும் அழகாக இருப்பதாக கூறியிருந்தார். விஜய் அவர்கள் இதை கூறும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
விஜய் அவர்கள் தான் என்னை முதன்முறையாக படங்களில் நடிக்கலாமே என்று கூறினார். நடிக்க முடிவு எடுத்து முதல் நாள் படப்பிடிப்புக்கு செல்கிறேன் அன்றே எனக்கு விஜய் அவர்கள் போன் செய்து வாழ்த்து கூறினார்.
இதுபோன்ற விஷயங்கள் தான் அவர் இப்படி ஒரு பெரிய இடத்தில் இருப்பதற்கு காரணம் என்றார்.

Comments