அஜித் எதிர்ப்பார்த்து தோல்வி அடைந்த படங்கள் இவைதானாம்- அவரே சொல்கிறார்

தமிழ் சினிமாவில் அண்மை காலமாக அஜித் நடிக்கும் படங்கள் செம மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது விவேகம் படத்துக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் அஜித் பிரபல தொலைக்காட்சிக்கு கொடுத்திருக்கும் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவரிடம் எதிர்ப்பார்த்து தோல்வியடைந்த படங்கள் எது என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அஜித் உல்லாசம், ராசி போன்ற படங்கள் எதிர்ப்பார்த்து தோல்வியடைந்தது என்றார். கதை கேட்கும் போது நன்றாக இருந்தது, ஆனால் படம் சரியாக ஓடவில்லை.
அதுதான் சினிமா, எதிர்ப்பார்க்காதது எல்லாம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

Comments