பிக் பாஸ்: சசிகலாவை சூசகமாக தாக்கிய கமல்ஹாசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட நடிகை நமீதா, அந்த வீட்டிற்குள் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசனுடன் பகிர்ந்துகொண்டார்.
அதில், பிக்பாஸ் வீடு ஒரு ஃவைவ் ஸ்டார் ஜெயில் என்றார். அதற்கு பதிலளித்த கமல் இது இல்லை.. ஆனால் வெளியில் வேற ஃபைவ் ஸ்டார் ஜெயில்லாம் இருக்கு என்று கூறினார்.
அண்மையில் 5 அறைகள், செல்போன், ரோலிங் சேர், ஸ்பெஷல் கிட்சன் என பெங்களூரு சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளி சசிகலா ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்த வீடியோக்களும், சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையிலிருந்து ஷாப்பிங் சென்ற வீடியோவும் வெளியானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் வெளியில் வேற ஃபைவ் ஸ்டார் ஜெயில்லாம் இருக்கு என கூறியிருப்பது சசிகலாவின் சிறை ஆடம்பர வாழ்க்கையைத்தான் என கூறப்படுகிறது.

Comments